1. வெற்றி தொழில் முனைவோர் திட்டம்அறிவிப்பு: ஆகஸ்ட் 05, 2026பயனாளிகள் : ஆதி திராவிடர் (ம) பழங்குடி சமுதாயங்கள்நோக்கம் : ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினரில் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு நிலையான வாழ்வாதாரங்களையும், பொருளாதார தன்னிறைவையும் ஊக்குவித்தல்.மானியம் : வணிகக் கடன்களுக்கு 35% மூலதன மானியம் அல்லது அதிகபட்ச வரம்பு 3.5 இலட்சம் மற்றும் 6 % - வட்டி மானியம்வயது வரம்பு 18-55.நிதி : 75 கோடி ஒதுக்கீடு2. அண்ணல் அம்பேத்கர் வர்த்தக சாம்பியன்கள் திட்டம்(Annal Ambedkar Business Champions Scheme – AABCS)தொடக்கம்: ஜூன் 28, 2023பயனாளிகள் : ஆதி திராவிடர் (ம) பழங்குடி சமுதாயங்கள்நோக்கம்: பட்டியல் சாதி (ம) பழங்குடியின சமூகத்தினரிடையே பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், தொழில் முனைவோரை ஆதரித்தல்.மானியம் : வணிகக் கடன்களுக்கு 35% மூலதன மானியம் அல்லது அதிகபட்ச வரம்பு 1.5 கோடி மற்றும் 6 % - வட்டி மானியம்வயது வரம்பு 18-55.
நிதியமைச்சர் மரிய வில்சன் அவர்களால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த 2026-27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசின் திட்டங்களில் மேம்படுத்தப்பட்டு பெயர் மாற்றப்பட்ட திட்டங்கள் வேறுபாடு2026–27 தமிழ்நாடு பட்ஜெட் : பெயர் மாற்றம் மட்டுமா? திட்டங்களில் என்னென்ன மாற்றங்கள்?2026–27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில், ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த பல அரசுத் திட்டங்கள் புதிய பெயர்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை வெறும் பெயர் மாற்றங்கள் மட்டுமல்ல; சில திட்டங்களில் பயனாளிகள், திட்டத்தின் செயல்பாட்டு வரம்பு, வழங்கப்படும் வசதிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு போன்றவற்றிலும் மாற்றங்கள் மற்றும் விரிவாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.1. உலகம் உங்கள் கையில் → வெற்றி மடிக்கணினி திட்டம்மாணவர்களின் டிஜிட்டல் கல்வி மற்றும் தொழில்நுட்ப அணுகலை மேம்படுத்தும் நோக்கில் வெற்றி மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ₹2,000 கோடி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.2. முதல்வர் படைப்பகம் → டிஜிட்டல் நூலகம்நூலக சேவைகளை நவீனப்படுத்தி, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் டிஜிட்டல் வளங்களை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் நூலகம் என்ற வடிவில் மேம்படுத்தப்படுகிறது. இணையம், டிஜிட்டல் வாசிப்பு மற்றும் ஆன்லைன் வளங்களுக்கான அணுகல் இதன் முக்கிய அம்சங்களாகும்.3. அன்புச்சோலை → மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள்மூத்த குடிமக்களின் சமூக தொடர்பு, பொழுதுபோக்கு மற்றும் நலனை மேம்படுத்தும் வகையில் பிரத்யேக மையங்களாக திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.4. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் → பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம்இந்தத் திட்டத்தில் முக்கியமான விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காலை உணவுத் திட்டத்தின் பயன் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. எனவே இது பெயர் மாற்றம் மட்டுமல்ல; பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.5. நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் → மண்ணின் மகள் திட்டம்பெண் விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு திட்டம் மேம்படுத்தப்படுகிறது. நிலம் வாங்குவதற்கான உதவி மற்றும் தகுதியான பயனாளிகளுக்கான தொடர்புடைய சலுகைகளும் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன.6. விலையில்லா சைக்கிள் திட்டம் → நவீன மிதிவண்டி திட்டம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விலையில்லா சைக்கிள் திட்டம் நவீன மிதிவண்டி திட்டமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மிதிவண்டிகளுடன் Helmet, Water Bottle போன்ற கூடுதல் அம்சங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.7. நான் முதல்வன் → வெற்றி திறன் பயிற்சி திட்டம்இளைஞர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புத் தகுதி மற்றும் தொழில்சார் பயிற்சிகளை மையப்படுத்தி வெற்றி திறன் பயிற்சி திட்டம் என்ற பெயரில் தொடரப்படுகிறது.8. கலைஞர் கனவு இல்லம் → வெற்றி வீடு திட்டம்தகுதியான குடும்பங்களுக்கு பாதுகாப்பான நிரந்தர வீடுகளை ஏற்படுத்தும் நோக்கில் வெற்றி வீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீடமைப்புத் திட்டத்தின் செயல்பாட்டு இலக்குகள் மற்றும் நிதி உதவிகளில் மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.9. VB-G RAM G துணைத் திட்டம் → வெற்றி 150கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் நோக்கில் வெற்றி 150 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சம் தகுதியான கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 150 நாட்கள் வரை வேலைவாய்ப்பு வழங்குவதாகும்.
தமிழ்நாட்டின் வருவாயை பெருக்குவதற்காக பொருளாதார நிபுணர் மத்திய திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6 பேர் கொண்ட வருவாய் மேம்பாட்டுக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.இதன் உறுப்பினர்கள்முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் பொருளாதார நிபுணருமான பேராசிரியர் கே.பி.கிருஷ்ணன்வரி கொள்கை நிபுணர் அரபிந்த் மோடி இந்தியாவின் நேரடி மற்றும் மறைமுக வரிச் சட்டங்களை எளிமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர்.மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBEC) முன்னாள் தலைவர் நஜீப் ஷாதமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ.சித்திக்சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் எம்.சுரேஷ் பாபு